கூடலூர் கவுண்டம்பாளையம் அருகே 13 பள்ளிகளுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த நகராட்சி தலைவர்!

கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சி மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 13 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை, நகராட்சி தலைவர் அறிவரசு பள்ளிக்குழந்தைகளுக்கு உணவு வழங்கி தொடங்கி வைத்தார்.


கோவை: கூடலூர் கவுண்டம்பாளையம் அரசுத் தொடக்கப் பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை நகராட்சி தலைவர் அறிவரசு இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசுத் தொடக்க பள்ளிகள் மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் இன்று முதல் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி கோவை கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட கூ.கவுண்டம்பாளையம், பழையபுதூர், செல்வபுரம், புதுப்புதூர், சாமிசெட்டிபாளையம், விவேகானந்தா நகர், திருமலைநாயக்கன்பாளையம், தேவையம்பாளையம், இராவுத்தக்கொல்லனூர், தெக்குபாளையம்.

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், கஸ்தூரிபாளையம், ஜோதிபுரம் உட்பட 13 அரசு ஆரம்ப பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 853 பள்ளி குழந்தைகளுக்கு தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.



கூடலூர் கவுண்டம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், நகராட்சி தலைவர் அறிவரசு தலைமை தாங்கி பேசினார். இந்த விழாவிற்கு வந்தவர்களை நகராட்சி (பொறுப்பு) கமிஷனர் பிச்சைமணி வரவேற்று பேசினார். மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் முன்னிலை வகித்து பேசினார்.



இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் கிளாரா செளவுந்தரியா முதல்வரின் காலை உணவுத் திட்டம் குறித்து கவிதை வாசித்தார்.



அதைத் தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.



தொடர்ந்து நகராட்சித் தலைவர் அ.அறிவரசு பள்ளி குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கி திட்டத்தைத் துவக்கி வைத்தார்.



தொடர்ந்து அனைத்து குழந்தைகளுக்கும் நகராட்சி ஆணையர் மற்றும் கவுன்சிலர்கள் உணவுகளை வழங்கினர்.



அப்போது உணவருந்திக் கொண்டிருந்த ஒரு சிறுவன் முதல்வரின் காலை உணவுத்திட்டத்தால் என்னென்ன பயன்கள் என்று தெரிவித்தார். இதனைக் கேட்டு அனைவரும் கைத்தட்டி சிறுவனை பாராட்டினர். இன்றைய காலை உணவில் கேசரி, பொங்கல், சாம்பார் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள் சங்கீதா, அகில் சந்திரசேகர், பேங்க் முருகேசன், துரை செந்தில்குமார், பாலசுப்பிரமணியம், பொன்மாடசாமி, ஜெனார்த்தனன், ரேகா, ஜானகி, மணிமேகலை, சித்ரா, வனிதாமணி, ரேவதி, சரண்யா, கவிதாமணி, ராகுல், முருகானந்தம், திமுக மாணவர் அணி அந்தோனிராஜ், சுகாதார ஆய்வாளர் திருப்பதி, வேலாயுதம், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் தலைமை ஆசிரியர் உமா நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...