தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 71வது பிறந்தநாள் - பெரியநாயக்கன்பாளையத்தில் கட்சி கொடியேற்றி கொண்டாட்டம்!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்தநாள் விழாவை ஒட்டி பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக் கொடி ஏற்றியும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.


கோவை: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்தநாள் விழாவை ஒட்டி கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் தேமுதிகவினர் கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுக்தியாக கோவை பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் சார்பாக விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி 10க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

செங்காளிபாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சக்கையா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.சண்முகவடிவேல் கலந்துக்கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு வார்டு கவுன்சிலர் ஜெயப்பிரியா சக்கையா முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் காந்தி காலனி கிளையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



தொடர்ந்து என்.ஜி.ஜி.ஓ காலனி 4 ரோடு, ரங்கம்மாள் காலனி, வட்டமலைபாளையம் பாலாஜி நகர், கணபதி காலனி உள்ளிட்ட பகுதிகளும் அன்னதானம் வழங்கப்பட்டது.



அதேபோல் விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் விஜயகாந்தை வாழ்த்தி போஸ்டர்கள் மற்றும் சுவர் ஓவியங்களை வரைந்திருந்தனர்.



இந்த நிகழ்ச்சிகளில் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஜாகீர் உசேன், கணுவாய் ராஜன், எஸ்.வேல்ராஜ், ஆர்.ராஜா, கே.பி.சாகுல் ஹமித், ரவிக்குமார், எஸ்.கருணாநிதி, ராஜராஜேஸ்வரி, ஒன்றிய நிர்வாகிகள் அவைத்தலைவர் முருகன், பொருளாளர் தங்கதுரை, துணை செயலாளர்கள் பாக்கியராஜ், லட்சுமணன், மோகன்ராஜ், உமையாள், ரேவதி, ஆர்.ஜி.துரை, ராஜன், சூளைமான், தனபால், கே.பாக்கியராஜ், புனிதவள்ளி, ஆறுமுகம், நாகராஜ், கே.பாலாஜி, ஊராட்சி செயலாளர் கஜேந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...