249 கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு - 44.593 கிலோ குட்கா, பான்மசாலா பறிமுதல்

கோவையில் 249 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு நடத்தியதில் அரசால் தடைசெய்யப்பட்ட 44.593 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வணிகம் மேற்கொள்வது கண்டறிய நேரிட்டால் 94440 42322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், தகவல் தெரிவிப்பவர்கள் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் முழுவதும் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன், தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் களஆய்வு மேற்கொண்டனர். இந்த கள ஆய்வு சுமார் 249 கடைகளில் மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் போது 249 கடைகளில் சுமார் 44.593 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருளான பான்மசாலா மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.



பறிமுதல் செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்காவின் சந்தை மதிப்பு சுமார் ரூபாய். 44,593 ஆகும். களஆய்வின் முடிவில் முதல் முறை குற்றம் புரிந்த 24 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு துறையின் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களான பான்மசாலா மற்றும் குட்கா விற்பனை செய்த 249 கடைகளுக்கு அபராதமாக ரூபாய்.5000 வீதம் மொத்தம் ரூ.1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற திடீர் கள ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் நடைபெறும் எனவும், தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி, தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வணிகம் மேற்கொள்வது கண்டறிய நேரிட்டால் 94440 42322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், தகவல் தெரிவிப்பவர்கள் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...