தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா - உடுமலையில் தேமுதிகவினர் உற்சாக கொண்டாட்டம்!

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டையில் தேமுதிகவினர் 10 கிலோ கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். மேலும், ராஜகாளியம்மன் கோவிலில் கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது.


திருப்பூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, உடுமலைபேட்டையில், தேமுதிகவினர் அவர் உடல் நலம்பெற வேண்டி சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது.



தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டையில் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் 10 கிலோ கேக் வெட்டி விழாவை துவக்கி வைத்தார்.



பின்னர் பெரிய கோட்டை ஊராட்சியில் உள்ள ராஜகாளியம்மன் கோவிலில் கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது.



உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் பழனி ஆண்டவர் நகர் கோமதி நகர் கொல்லம் பட்டறை உட்பட 7க்கு மேற்பட்ட இடங்களிலும் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவசக்தி காலனி சங்கர் நகர் செல்லப்பம்பாளையம் மானுப்பட்டி உரல் பட்டி ஊராட்சிகளில் தேமுதிக கொடியேற்றி இனிப்புகள் மற்றும் அன்னதானம் அனைத்து இடங்களிலும் வழங்கப்பட்டது.

மேலும் எரிசனம்பட்டியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் மாணவிகளுக்காக இரண்டு எடை இயந்திரங்கள் வழங்கப்பட்டன.



சிவசக்தி காலணியில் பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது.

மாவட்ட கழக செயலாளர் ஆறுசாமி தலைமை தாங்கினார், மாவட்ட கழக தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், பொருளாளர் அண்ணாதுரை , துணைச் செயலாளர்கள் ரமேஷ் பாபு, ஆலாம் பாளையம் கந்தசாமி, செயற்குழு உறுப்பினர் ஜி.கே என்கிற கணேஷ்குமார் பொதுக்குழு உறுப்பினர்கள் கிரி, பெரியசாமி, குணசேகரன் உடுமலை நகர செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் துரை கண்ணன் மற்றும் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...