திருட முயன்றபோது அம்மன் சிலையின் கை உடைப்பு - சிலை கொள்ளையர்களுக்கு காவல்துறை வலைவீச்சு

கோவை மாவட்டத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சடையாண்டியப்பன் கோவிலுக்கு இரவு நேரத்தில் சென்ற கொள்ளையர்கள், அங்கிருந்த பூமாரியம்மன் சிலையை திருட முயன்றுள்ளனர். அப்போது சிலையின் ஒரு கை திடீரென உடைந்ததால், அப்படியே விட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.


கோவை: சடையாண்டியப்பன் கோவிலில் இரண்டு முறை கொள்ளை நிகழ்வு நடந்துள்ளது பழங்குடியின மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கொள்ளையர்களின் அட்டுழீயத்திற்கு ஒருமுடிவு கட்ட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை ஆலந்துறை அடுத்த நல்லூர்வயல்பதி கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த சடையாண்டியப்பன் கோவில் அப்பகுதி மக்களின் முக்கிய கோவிலாக விளங்கி வருகிறது.

கோவிலில் உள்ள பழமை வாய்ந்த பூமாரியம்மன் சிலைக்கு நாள்தோறும் பூஜை நடைபெற்று வந்த நிலையில் இன்றும் வழக்கம் போல் பூஜை செய்வதற்காக பூசாரி வந்துள்ளார்.



அப்போது பூமாரியம்மன் சிலையில் இடது கை உடைக்கப்பட்டு சிலையின் அருகிலேயே கிடந்துள்ளது. சிலையின் கீழ் பகுதியிலும், சிலையின் கிரீடம் சேதமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி இது தொடர்பாக ஊர் மக்களுக்கு தகவல் அளித்தார்.



இதனையடுத்து அப்பகுதியில் திரண்ட ஊர் பொதுமக்கள் காருண்யா நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பேரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் அப்பகுதியில் இருந்த தடையங்ளை சேகரித்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையில் சிலையின் கீழ் பகுதி சேதமாகியுள்ளதால் திருட முயன்றிருக்கலாம் எனவும் அப்போது சிலையின் கைப்பகுதி உடைந்ததால் அப்படியே விட்டுவிட்டு சென்றிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சிலையை உடைத்த மர்ம நபர்கள் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு இதேபோன்று பூமாரியம்மன் சிலையின் மூக்குபகுதி உடைக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு அப்பகுதியில் கருப்பாரயன் கோவில் சிலை திருடபட்டது என குறிப்பிடும் அப்பகுதியினர்,இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுபோன்று தொடர் சிலை உடைப்பு மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...