கோவையை வண்ணமயமாக அலங்கரித்த வடமாநில ஹோலி

வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் வடமாநிலங்களில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையை கோவையில் வசிக்கும் வடமாநில மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

அரக்கன் இரன்யகசிபுவின் சகோதரியான ஹோலிகா எரித்து கொல்லப்பட்ட நிகழ்வை வசந்த கால வரவாக வடமாநில மக்கள் ஹோலி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நாளில் வாழ்வில் வண்ணங்கள் சேரும் வகையில் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளையும், வண்ண கலவைகளையும் வீசியும் பூசியும் மக்கள் மகிழ்வது வழக்கம்.

இதன் படி கோவையில் வசித்து வரும் வடமாநில மக்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். 

கோவை ஆர்.எஸ்.புரம், சுக்ரவார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வண்ண வண்ண பொடிகளை தூவியும், இந்தி பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடியும் இந்த பண்டிகையை கொண்டாடினர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் இம்முறை தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுவதால் தண்ணீரை மிச்சப்படுத்தும் வகையில் வண்ண பொடிகள் மற்றும் மலர்களை தூவி மட்டும் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதாக தெரிவித்தனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...