சென்னை கோர்ட்டு தீர்ப்புக்கு வரவேற்பு - தாராபுரத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக்கூட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று தாராபுரத்தில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அண்ணா சிலை முன்பு நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் நேற்று மாலையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.



அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து வந்தனர். கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அ.தி.மு.க. இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வந்தது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பி.எஸ். உள்ளிட்ட 4 பேரை கட்சியிலிருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில்மனுதாக்கல் செய்தனர்.

அதில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லும். 4 பேரை நீக்கியது செல்லும் என தீர்ப்பளித்தது.



இதையொட்டி தாராபுரம் அண்ணா சிலை முன்பு நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று மாலையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

அப்போது மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் கவுரி சித்ரா முருகேசன், மாவட்ட கவுன்சிலர் பானுமதி கருணாகரன், நகர பொருளாளர் சாமுவேல், அம்மா பேரவை செயலாளர் கே.என். ராமசாமி, மாவட்ட பிரதிநிதி கோல்டன் ராஜ், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அரசு குமாரன், மலை மாரிமுத்து, தினேஷ் குமார், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கே.ஆர்.சதீஷ், மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்க தலைவர் பரணிகுமார், ஸ்டுடியோ கார்த்திக், லிட்டில் ராஜேந்திரன், வார்டு செயலாளர்கள் கணேசன், ராஜேஸ்வரி, செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...