திருப்பூரில் ஹேப்பி சண்டே நிகழ்ச்சி - மேயர், மாநகராட்சி ஆணையர் நடனமாடி உற்சாகம்!

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மகிழ்ச்சியான ஞாயிறு எனப்படும் ஹேப்பி சண்டே நிகழ்ச்சி தொடர்ந்து மூன்றாவது மாதமாக இன்று திருப்பூர் யூனியன் மில் சாலை முதல் கேபிஎன் காலனி வரை நடைபெற்றது. நிகழ்ச்சியை துவக்கி வைத்த மேயர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஆகியோர் திரைப்பட பாடலுக்கு நடனமாடி உற்சாகப்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று நடைபெற்ற ஹேப்பி சண்டே நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர், ஆணையாளர் உள்ளிட்டோர் நடனமாடி உற்சாகப்படுத்தினர்.

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மகிழ்ச்சியான ஞாயிறு எனப்படும் ஹேப்பி சண்டே நிகழ்ச்சி தொடர்ந்து மூன்றாவது மாதமாக இன்று திருப்பூர் யூனியன் மில் சாலை முதல் கேபிஎன் காலனி வரை நடைபெற்றது. 5 கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த ஹாப்பி சண்டே நிகழ்வில் 80க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றன.

இளைஞர்களுக்கான டிஜே நடனம், குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், சிலம்பம், பரதம், கராத்தே உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



தொடர்ந்து மாதந்தோறும் இந்நிகழ்வு நடைபெறும். மக்களின் ஆர்வம் மற்றும் உற்சாகத்தை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்வின் ஒரு பகுதியாக டிசம்பர் 31ஆம் தேதி இரவு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் மிகப்பெரும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்நிகழ்வில், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன் குமார் , மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரைப்பட பாடலுக்கு நடனமாடி உற்சாகப்படுத்தினர்.



தொடர்ந்து சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை பார்வையிட்ட மேயர் தினேஷ்குமார். அவர்களோடு விளையாடி சிறுவர்களையும் உற்சாகப்படுத்தினார். கடந்த மாதங்களை விட இம்மாதம் பொது மக்களின் கூட்டம் அதிகளவு இருந்ததன் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் பெண்களுக்காக தனி மேடை அமைக்கப்பட்டு டிஜே நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...