வால்பாறை சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் - சுற்றுலா பயணிகள் கோரிக்கை!

வால்பாறையில் உள்ள சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு, வெள்ளை மலை டனல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களில் அதிநவீன கழிப்பறை. உடைமாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களில் கழிப்பறை மற்றும் உடை மாற்றும் அறை ஆகிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடங்கள் உள்ளன. இவற்றில் சோலையார் அணை,நீரார் அணை, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு, வெள்ளைமலை டனல், மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் தேயிலை தோட்டங்கள் உள்ளன,

இதை சுற்றி பார்க்க பல்வேறு இடங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர், அதிக சுற்றுலா பயணிகள் வரும் இடமான கூழாங்கல் ஆறு பகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீரில் விளையாடி பொழுது போக்குகின்றனர்.

இந்த இடங்களில் பெண்கள் உடை மாற்றுவதற்கும் கழிப்பறை வசதி இல்லாமலும் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர், கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் அதி நவீன கழிப்பறையும். உடைமாற்றும் அறையும் நகராட்சி நிர்வாகம் கட்டித் தருவதற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் குழந்தைகள் பெரியவர்கள் தண்ணீரில் விளையாடுவதால் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...