தடாகம் அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய 2 காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்!

தடாகம் சாலை காளையனூர் பகுதியில் ஊருக்குள் புகுந்த 2 காட்டு யானைகள், தனியார் வாழை தோட்டத்திற்குள் நுழைந்து அங்கிருந்த வாழை மரங்களை சேதப்படுத்திய நிலையில், தகவலறிந்து வந்த வனத்துறையினர், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.



கோவை: தடாகம் அருகே காளையனூர் பகுதியில் ஊருக்குள் 2 காட்டு யானைகள் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டத்தில் தடாகம், கனுவாய், சோமையம்பாளையம், மருதமலை, மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வனப்பகுதியையும் ஒட்டியும், மலையை ஒட்டியும் உள்ளது. இங்கு காட்டுயானைகள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

இந்நிலையில் அவ்வனவிலங்குகள் தண்ணீர் தேடியும் உணவு தேடியும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அவ்வாறு ஊருக்குள் புகும் வனவிலங்குகள் விளைநிலங்களை சேதப்படுத்தி விட்டு சென்று விடுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு தடாகம் சாலை காளையனூரில் 2 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து உலா வந்துள்ளன. பின்னர் அங்குள்ள தனியார் வாழை தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானைகள், வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு சென்ற வனத்துறையினர் இரண்டு காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதால் வனத்துறையினர் இரவு நேர ரோந்துபணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...