அனுவாவி சுப்ரமணியசாமி கோவிலில் ரூ.13 கோடி மதிப்பில் ரோப்கார் சேவை - அமைச்சர் சேகர்பாபு உறுதி!

கோவை பெரியதடாகம் பகுதியில் உள்ள அனுவாவி கோவிலில் ரோப்கார் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, 13 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் 460 மீட்டருக்கு ரோப்கார் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.


கோவை: பெரியதடாகத்தில் உள்ள அனுவாவி கோவிலில் 13 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் ரோப்கார் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கோவை பெரியதடாகம் பகுதியில் அமைந்துள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி மலைக்கோவிலில் அடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக மட்டுமே செல்ல முடியும். இதர கோவில்களில் இருப்பது போல் இங்கு சாலைகளோ வேறு வசதிகளோ இல்லை.

எனவே அடிவாரத்தில் இருந்து மேலே உள்ள கோவிலுக்கு செல்ல சாலை வசதிகளோ அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என பல்வேறு பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு ரோப்கார் அமைப்பது குறித்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு, மலை கோவில்களில் முதியோர்கள், வசதிக்காக ரோப்கார், தானியங்கி லிப்ட் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென முதல்வரின் உத்தரவிற்கிணங்க அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவிலில், 560 படிகள் கொண்ட இக்கோவிலில் 460 மீட்டர் அளவுள்ள ரோப்கார் வசதி ஏற்படுத்தி தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த வசதி 13 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. ரோப் கார் அமைக்கப்படுகின்ற பொழுது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, கழிவறை வசதி அனைத்தும் இணைந்து ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, திருக்கழுக்குன்றம், திருநீர்மலை, இடும்பன் மலை, திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களுக்கும் ரோப் கார் வசதியை ஏற்படுத்தி தருவதற்கும், மேலும் ஏற்கனவே பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கரூர் அய்யர்மலை திருக்கோவில், சோளிங்கர் நரசிம்ம பெருமாள் திருக்கோவில்களில் ரோப்கார் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

அதேபோல் மருதமலையில் தானியங்கி லிப்ட், சுவாமி மலையில் தானியங்கி லிப்ட் அமைப்பதற்கு உண்டான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு மருதமலையில் அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. சுவாமி மலையிலும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக அறிக்கை வரப்பெற்று அங்கு 3 கோடியே 60 லட்சம் மதிப்பில் தானியங்கி லிஃப்ட் அமையப்பட உள்ளது.

இந்த ஆட்சி அமைந்த பிறகு சுமார் 922 கோவில்களில் குடமுழக்கு நடைபெற்று உள்ளது. 5135 கோடி ரூபாய் பெருமானமுள்ள 5335 ஏக்கர் நிலம் இந்த ஆட்சியில் தான் மீட்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆட்சியை பொருத்தவரை இறை அன்பர்களுக்கும், இறைப்பற்று கொண்டவர்களுக்கும் மகிழ்ச்சியான ஆட்சியாக அமைந்துள்ளது.

அனுவாவி கோவில் நடைபாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் சென்சார், அல்லது மின்வேலிகள் அமைக்கப்படுமா என்பது குறித்தான கேள்விக்கு அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவசியம் தேவைப்படும் என்றால் அதனையும் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மற்றும் அனுவாவி கோவில் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...