தாராபுரம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிக்கொண்ட பயங்கர விபத்து - தாய், மகன் பலியான சோகம்!

தாராபுரம் - பழனி சாலை மனக்கடவு பகுதியில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு வேன் அடுத்தடுத்து மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் தாய் மற்றும் மகன் உயிரிழந்த நிலையில், மேலும், 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த மனக்கடவு பகுதியில் 2 கார் மற்றும் ஒரு வேன் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் தாய் மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கேயம் அருகே உள்ள ஓலப்பாளையம் சங்கனன் மேடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் தனது மனைவி அபிராமி, மகன் அஜய், மகள் ஹாசினி மற்றும் மாமியார் லதா ஆகியோர் ஓலப்பாளையத்தில் இருந்து தாராபுரம் வழியாக பழனிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே பழனியில் இருந்து ஈரோடு திருநகர் காலனி பகுதிக்கு சென்று கொண்டிருந்த டொயோட்டா காரை ஓட்டி வந்த திருமூர்த்தி(47) அவரது மனைவி தேவி(46) அவரது மகன் சரவணன் (17) மகள் சௌமியா (19) ஆகியோர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.



அப்போது திருமூர்த்தி என்பவர் காரை ஓட்டி வந்தார் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே சரவணன் (17) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



இந்த விபத்தின் போது பழனி நோக்கி சென்று கொண்டிருந்த பயணியர் டூரிஸ்ட் வாகனத்தின் மீது இரண்டு கார்களும் மோதியதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டூரிஸ்ட் வாகனம் அருகில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.



இந்த நிலையில் விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். சிகிச்சைக்காக வந்திருந்த திருமூர்த்தியின் மனைவி தேவி, சிகிச்சை பலனின்றி தாராபுரம் அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாய் தேவி மற்றும் மகன் சரவணன் ஆகியோர் உயிரிழந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



இந்த விபத்து குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தின் காரணமாக தாராபுரம்-பழனி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்த வாகனங்களை மாற்றுப் பாதையில் போலீசார் திருப்பி விட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...