தெருவிளக்கு இல்லாமல் மக்கள் அவதி - தீப்பந்தம் ஏற்றி வைத்து நகராட்சிக்கு சரமாரி கேள்வி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு வடுகபாளையம் பகுதியில் தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் தீப்பந்தம் ஏற்றி வைத்தனர். இதில், பாஜக கவுன்சிலர் சசிரேகாயும் பங்கேற்று தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.



திருப்பூர்: ஓராண்டுக்கு முன் புதுப்பிக்கப்பட்ட நகராட்சி தலைவி கவிதாமணியின் அறை 3 லட்சம் ரூபாய் செலவில் மீண்டும் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பணம் இருக்கும் போது தெருவிளக்கு அமைக்க பணம் இல்லையா? என கிராம மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு வடுகபாளையம் பகுதியில் தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் தீப்பந்தம் ஏற்றி வைத்தனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: இப்பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள், பள்ளி, கடைகள் உள்ளிட்டவை உள்ளன. நீண்ட நாட்களாக இப்பகுதியில் தெருவிளக்கு எரிவதில்லை இது குறித்து நகராட்சியில் தெரியப்படுத்தியும் இரண்டு மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் வீதிகள் இருள் சூழ்ந்து காணப்படுவதுடன் வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் வேகத்தடை பள்ளங்களில் சாக்கடைகளில் விழும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. உடனடியாக தெருவிளக்குகளை சீரமைத்து தர வேண்டும் என்றனர்.

தீப்பந்தம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த, 18வது வார்டு கவுன்சிலர் சசிரேகா கூறுகையில், தெருவிளக்குகளை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் என்னிடம் பலமுறை தெரிவித்தனர்.

இதே போல் சாக்கடை ரோடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் அதிகம் உள்ளன இது குறித்து நகராட்சி கூட்டத்தில் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஓராண்டுக்கு முன் புதுப்பிக்கப்பட்ட நகராட்சி தலைவர் கவிதாமணியின் அரை 3 லட்சம் ரூபாய் செலவில் மீண்டும் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நகராட்சி தலைவரின் அறையை புதுப்பிக்க நிதி உள்ள சூழலில் தற்காலிக நடவடிக்கையாக தெரு விளக்குகளை எரிய வைக்க நகராட்சியால் முடியாதா? பொதுமக்களுக்கு பதில் கூற முடியாததால் நானும் தீப்பந்தம் ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தெருவிளக்குகளை நகராட்சி சீரமைக்க வேண்டும் என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...