குண்டடம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு - விலை வீழ்ச்சி, விவசாயிகள் கவலை

வறட்சி காரணமாக குண்டடம் சந்தைக்கு மாடுகளின் வரத்து அதிகமான காணப்பட்டது. 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான மாடுகள், இந்த வாரம் 40 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.


திருப்பூர்: கேரளாவில் ஓணம் பண்டிகை விமர்ரிசையாக கொண்டாடப்படுவதாலும், இறைச்சி தேவை அதிகம் இல்லாததாலும், கேரளா வியாபாரிகள் அதிகளவில் மாடுகளை வாங்காததால் மாடுகளின் விலை குறைந்துள்ளதாக வியபாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் மாட்டு சந்தைக்கு குண்டடம், காங்கயம், கோவை, உடுமலை, பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

கேரளா, பொள்ளாச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச்செல்கின்றனர். தவிர விவசாயிகளும் வந்து வளர்ப்பு மாடுகளை வாங்கிச் செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 7 முதல் 10 லிட்டர் வரை பால் கொடுக்கும் ஜெர்சி மாடு ரூ.60 ஆயிரம் வரை விலை போனது. ஆனால் தற்போது வறட்சி காரணமாக விலை குறையத்தொடங்கி இருப்பதால் கறவை மாடுகளின் விலையும் குறைந்து வருகிறது.

குண்டடம் மாட்டு சந்தையில் நேற்று 7 முதல் 10 லிட்டர் பால் கொடுக்கும் ஜெர்சி மாடு ரூ.40ஆயிரம் வரையே விலை போனது. அதே நேரத்தில் அடிமாட்டுக்கு போகும் கன்றுகளின் விலையில் பெரிய மாற்றமில்லை. 20 கிலோ உள்ள கன்றுகள் ரூ.3 ஆயிரம் வரை விலை போயின. நேற்று மட்டும் சந்தைக்கு சுமார் 2 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வந்தன. மாடுகள் மற்றும் கன்றுகளில் பெரும்பாலானவை விற்றுவிட்டன.

இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை விமர்ரிசையாக கொண்டாடப்படுவதாலும், இறைச்சி தேவை அதிகம் இல்லாததாலும், கேரளா வியாபாரிகள் அதிகளவில் மாடுகளை வாங்காததால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...