லாரி மோதி காட்டு மாடு சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம் - ஓட்டுநரை பிடித்து காவல்துறை விசாரணை

கோவை மாவட்டம் ஆனைகட்டி-கோவை சாலையில் சலீம் அலி பறவைகள் சரணாலயம் அருகே லாரி மோதியதில் காட்டு மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: லாரி மோதி உயிரிழந்த காட்டுமாடு பிரேத பரிசோனை செய்யப்பட்டது. இதில் இறந்தது பெண் காட்டு மாடு எனவும், வயது சுமார் 5-6 இருக்கலாம் எனவும், வாகனம் மோதிய தாக்கத்தால் மார்பெலும்பு உடைந்து மார்புகூட்டில் உதிரப்போக்கு ஏற்பட்டதனால் உண்டான இருதய அதிர்ச்சியால் காட்டு மாடு இறந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.



கோவை மாவட்டம் ஆனைகட்டி-கோவை சாலையில் சலீம் அலி பறவைகள் சரணாலயம் அருகே லாரி மோதியதில் காட்டு மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



இதனையடுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஆனைகட்டி மலைப் பகுதியில் காட்டு மாடுகள், மான்கள், யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் உள்ளன. இவைகள் ஆனைகட்டி கோவை சாலையில் அவ்வப்பொது கடந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மாலை ஆனைகட்டி-கோவை சாலையில் சலீம் அலி பறவைகள் சரணாலயம் அருகே காட்டு மாடுகள் இரண்டு சாலையை கடந்துள்ளன. அப்போது அவ்வழியாக வந்த லாரி மோதியதில் காட்டு மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மற்றொரு காட்டு மாடு காயமடைந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

இதையடுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டு லாரி ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இன்று காலை சுமார் கோவை வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோட்ட உதவி வனப்பாதுகாவலர், கோவை வனச்சரக அலுவலர், தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் பிரேத பரிசோதனை செய்தார்.

பிரேத பரிசோனையில் இறந்தது பெண் காட்டு மாடு எனவும், வயது சுமார் 5-6 இருக்கலாம் எனவும், வாகனம் மோதிய தாக்கத்தால் மார்பெலும்பு உடைந்து மார்புகூட்டில் உதிரப்போக்கு ஏற்பட்டதனால் உண்டான இருதய அதிர்ச்சியால் காட்டு மாடு இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து லாரி ஓட்டுநரிடம் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...