டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியரிடம் குடியிருப்பு வாசிகள் நேரில் மனு

காங்கேயம் வட்டம் சிவன்மலை கிராமத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைய உள்ள டாஸ்மாக் கடையை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



திருப்பூர்: பள்ளிக்கூட மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு குடியிருப்பு பகுதியில் புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடையை அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் கேட்டுகொண்டனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம் சிவன்மலை கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகன்றனர். இந்த கிராமத்தை சுற்றி சந்தியாநகர், பள்ளகாட்டுபுதூர் உள்ளிட பல்வேறு ஊர்கள் உள்ளன.

இதனிடையே தற்போது சிவன்மலை கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த டாஸ்மாக் கடை அமைய உள்ள இடமானது பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பகுதியாக உள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு அன்றாடம் சென்று வரக்கூடிய பகுதியில் இந்த டாஸ்மாக் கடை அமைந்தால் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்.



அதுமட்டுமின்றி பெண்களும் இந்த பகுதியை அச்சத்துடனை கடந்து செல்ல வேண்டிய சூழல் உருவாகும். எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து இந்த பகுதியில் அமைய உள்ள டாஸ்மாக் கடையை தடை செய்ய வேண்டும் என குடியிருப்பு வாசிகள் மனு அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...