பராமரிப்பின்றி கிடக்கும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி - இடிந்து விழும் முன்பே சீரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

உடுமலையில் பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டியை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: குடிநீர் மேல்நிலைத்தொட்டியின் கீழ்பாகம், தூண்கள் உள்ளிட்டவற்றில் விரிசல் ஏற்பட்டு கான்கிரீட் உதிர்ந்து கீழே விழுந்து வருகிறது.



குடிநீர் தொட்டியை சுற்றிலும் கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரும் சேதமடைந்து உள்ளதா மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி ராமசாமி நகரில் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இதனால் தொட்டியின் கீழ்பாகம், தூண்கள் உள்ளிட்டவற்றில் விரிசல் ஏற்பட்டு கான்கிரீட் உதிர்ந்து கீழே விழுந்து வருகிறது. அத்துடன் குடிநீர் தொட்டியை சுற்றிலும் கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரும் சேதமடைந்து உள்ளது.



அதுமட்டுமின்றி தொட்டி நிறைந்து வெளியேறும் தண்ணீர் வழிந்து செல்வதில்லை. மாறாக தொட்டியின் கீழ் புறத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் குடிநீர் தொட்டி படிப்படியாக வலுவிழந்து நாளடைவில் முற்றிலுமாக இடிந்து விழும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...