திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் - அத்தப்பூ கோலமிட்டு மாணவிகள் நடனம்

கேரள மக்களின் வசந்தகாலமான ஓணம் திருவிழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அத்தப்பூ கோலமிட்டு, பாடலுக்கு ஏற்றவாறு மாணவியர் நடனமாடி மகிழ்ந்தனர்.


திருப்பூர்: மாணவிகள் கேரள சேலை அணிந்து ஓணம் திருநாளை வரவேற்றனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு ஒருவொருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை பரிமாற்றிக்கொண்டனர்.

கேரள மக்களி்ன் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. பெரும்பாலான கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்திலும் வசிப்பதால் இங்கும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசிக்கும் திருப்பூரிலும் ஒணம் பண்டிகை கொண்டாட்டமானது களைகட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஒணம் பண்டிகை கொண்டாட்டமானது சிறப்பாக நடைபெற்றது.

மாணவிகள் கேரள சேலை அணிந்து, அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.



மேலும் நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஓணம் பண்டிகைக்காக திருப்பூரில் நாளை உள்ளூர் விடுமுறை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...