ஓணம் பண்டிகையை முன்னிட்டு உடுமலை சந்தையில் à®•ுவிந்த கேரளா வியாபாரிகள்!

கேரள மாநிலம் முழுவதும் ஓணம்  பண்டிகை கொண்டாட்டம் களைகட்டி வரும் நிலையில் உடுமலை சந்தைக்கு கேரளா வியாபாரிகள் வரத்து அதிகரித்துள்ளதால் பூக்கள் மற்றும் காய்கறி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் கேரள வியாபாரிகள் வருகை காரணமாக பேருந்து சேவைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.



திருப்பூர்: ஓணம் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக உடுமலை சந்தைக்கு கேரள வியாபாரிகள் வரத்து அதிகரித்துள்ளதால் பூக்கள் மற்றும் காய்கறி விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக கேரளா மாநிலம் மறையூர் மூணாறு நாள்தோறும் வாகனங்கள் சென்று வருகின்றன. தற்பொழுது கேரள மாநிலம் முழுவதும் ஓணம்பண்டிகை கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. நாளை ஓணம்கொண்டாடப்படும் நிலையில் உடுமலையில் காய்கறிகள் விற்பனை களை கட்டி உள்ளது.

தினசரி காய்கறி மார்க்கெட்டில்அதிக அளவு காய்கறிகள் வாங்க கேரளா வியாபாரிகள் குவிந்தனர் ஓணம் பண்டிகை விருந்துக்க காய்கறிகள் பழங்கள் பூக்கள் வெல்லம்உள்ளிட்டவற்றை வாங்குவதற்காகவும்நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள் அதிகளவு குவிந்தனர். இதனால் காய்கறிகள் பழங்கள் விலை அதிகமாகி உள்ளது.



இதற்கிடையில் உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து மூணாறு செல்வதற்கு அதிகளவு கூட்டம் வர துவங்கியுள்ளதால் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...