கோவையில் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா மேம்படுத்தப்பட்டுள்ளது - மாநகராட்சி ஆணையர் தகவல்!

கோவை‌யில்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ ரூ.51 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ டாக்டர்‌.அப்துல்கலாம்‌ சிலை, சுழலும்‌ பெரிஸ்கோப்‌, ஈர்ப்பு பந்து, நியூட்டன்‌ 3ம்‌ விதி, கியாபெல்‌ மற்றும்‌ செயின்‌ டிரைவ்‌ உள்ளிட்ட பல்வேறு‌ சிறப்பு அம்சங்களுடன்‌ அறிவியல்‌ பூங்கா மேம்படுத்தப்பட்டு உள்ளது என மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை‌யில்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ ரூ.51 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ அறிவியல்‌ பூங்கா மேம்படுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ டாடாபாத்‌, அழகப்பா செட்டியார்‌ சாலையில்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ ரூ.51 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 30 சென்ட்‌ பரப்பளவு கொண்ட இடத்தில்‌ அறிவியல்‌ பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

அறிவியல்‌ பூங்காவில்‌ பார்வையாளர்‌ நேரம்‌ காலை 07.00 மணி முதல்‌ 10.00 மணி வரையிலும்‌, மாலை 4.30 மணி முதல்‌ 7.30 மணி வரையிலும்‌ மாணவ, மாணவியா்கள்‌, ஆசிரியாகள்‌ பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது. இங்கு பார்வையாளர்களுக்கு நுழைவுக்கட்டணம்‌ ஏதும்‌ வசூலிக்கப்படுவதில்லை.

முதலமைச்சர்‌ உத்தரவின் படி, கடந்த 08.05.2023 அன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்‌ கே.என்‌.நேரு, மாணவர்கள்‌ பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



இந்த அறிவியல்‌ பூங்காவில்‌ பெரிஸ்கோப்‌ மாதிரி, பி.எஸ்‌.எல்‌.வி.ராக்கெட்‌ மாதிரி, சந்திராயன்‌ 3 மாதிரி, ஈர்ப்பு கருவிகள்‌, டாக்டர்‌.அப்துல்கலாம்‌ சிலை, கார்‌ கட்டமைப்பு, மழை வில்‌ வளைவு, சுழலும்‌ பெரிஸ்கோப்‌, ஒலியின்‌ வேகம்‌, தனிம அட்டவணை, அலை இயக்கம்‌, ஈர்ப்பு பந்து,



நியூட்டன்‌ 3வது விதி, பாஸ்கல்‌ சட்டம்‌, மைய விலக்கு விசை, கியா்பெல்‌ மற்றும்‌ செயின்‌ டிரைவ்‌, ஆற்றல்‌ நிறை மற்றும்‌ மந்த நிலையில்‌ பாதுகாப்பு, மோபியஸ்‌ இசைக்குழு, உணர்வுச்சுவ்‌, உலக நேர குளோப்‌ வகை, ஈரப்பதம்‌ அளவிடும்‌ மீட்டா, மணிக்கூண்டு, எதிரொலிகுழாய்‌, சூரிய குடும்பம்‌, மழை அளவி உள்ளிட்ட அறிவியல்‌ சிறப்பு அம்சங்களை‌ கொண்டு பூங்கா‌ வடிவமைக்கப்பட்டு உள்ளது.



இதனை மாணவ, மாணவியர்கள்‌, ஆசிரியர்கள்‌, பொதுமக்கள்‌ ஆகியோர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, பயன்பெற வேண்டும். இவ்வாறு மாநகராட்சி ஆணையாளா்‌ பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...