கோவை கணபதி அருகே பேக்கரி கடை உரிமையாளர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை!

கணபதி அருகே பேக்கரி கடை உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த ரூ.1.72 லட்சம் பணம் மற்றும் 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: கணபதி அருகே பேக்கரி கடை உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து, ரூ.1.72 லட்சம் பணம் மற்றும் 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கணபதி அடுத்த தெய்வநாயகி நகரின் 3வது வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (56). இவர் தனது மனைவி மற்றும் மகன்கள் பிரேம், ஸ்டீபன் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

ஆரோக்கியசாமி கணபதி பகுதியில் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன்கள் வெள்ளக்கிணறு பகுதியில் டைல்ஸ் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆரோக்கியசாமி சனிக்கிழமை வியாபாரம் முடித்து அன்று வசூலான பணத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்து உள்ளார்.

அதன்பிறகு குடும்பத்தினருடன் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இன்று அதிகாலை ஊர் திரும்பியபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக உள்ளே சென்று பார்த்த போது, துணிமணிகள் கலைந்து, சிதறி கிடந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆரோக்கியசாமி பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த ரூ.1.72 லட்சம் மற்றும் 30 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து ஆரோக்கியசாமி சரவணம்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆரோக்கியசாமி வீட்டில் கைரேகை பதிவுகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேக்கரி அதிபர் வீட்டுக்குள் எத்தனை பேர் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...