காரமடை அருகே ரூ.10.5 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் - திமுக எம்.பி ஆ.ராசா துவங்கி வைத்தார்!

காரமடை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.10.5 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள புதிய தார் சாலைகள் அமைத்தல், தார் சாலைகளை புதுப்பித்தல், புதிதாக போர்வெல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை நீலகிரி எம்பி ஆ.ராசா துவக்கி வைத்தார்.


கோவை: காரமடை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.10.5 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்ட பணிகளை நீலகிரி எம்பி ஆ.ராசா துவக்கி வைத்தார்.

காரமடை நகராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர், காந்தி நகர், அம்பேத்கர் நகர், வாணியர் வீதி, அண்ணா வீதி, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கலைஞரின் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய தார் சாலைகள் அமைத்தல், தார் சாலைகளை புதுப்பித்தல், புதிதாக போர்வெல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் ரூ.10.5 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ளன.

இந்த பணிகளுக்கான துவக்க நிகழ்ச்சியில், திமுக துணை பொது செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா கலந்து கொண்டு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. பா.அருண்குமார், திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட அவைத்தலைவர் புருஷோத்தமன், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மனோகரன், நகர செயலாளர் வெங்கடேஷ், நகர் மன்றத்தலைவர் உஷா வெங்கடேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உள்பட தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...