பர்லியாறு அருகே 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - வாலிபர் பலியான சோகம்!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நண்பர்கள் 4 பேர் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஊர் திரும்பிய போது, பர்லியார் மரப்பாலம் அருகே கார் நிலைதடுமாறி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பிரவீன் குமார் (32) என்பவர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை பர்லியார் அருகே கார் ஒன்று 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் கரடிவாவி மல்லே கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தாராம் (42). இவர் தனது நண்பர்களான அன்னூரை சேர்ந்த வேல்முருகன் (33), அமீனுல்லா (45), பிரவீன் குமார் (32) உள்ளிட்டோருடன் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

பின்னர் நேற்று இரவு அவர்கள் மீண்டும் காரில் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். காரை சாந்தாராம் ஓட்டி வந்தார். பர்லியார் மரப்பாலம் அருகே வந்தபோது கார் நிலைதடுமாறி வலது புற தடுப்புச்சுவரில் மோதி சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காரில் பின்புறம் அமர்ந்திருந்த பிரவீன் குமார் என்பவர் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

மேலும், படுகாயமடைந்த சாந்தாராம், வேல்முருகன், அமீனுல்லா உள்ளிட்டோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...