கோவை தெற்கு, மேற்கு மண்டலங்களில் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ தூய்மைப்‌ பணிகள்‌, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ ரூ.4.76 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்றுவரும்‌ கழிவு சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணி, தார்‌ சாலை பணிகள்‌, குடிநீர்‌ திட்டப்பணி ஆகிய வளர்ச்சி திட்ட பணிகளை மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.98க்குட்பட்ட சுந்தராபுரம்‌, சிட்கோ எல்‌.ஐ.சி பகுதியில்‌ மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளார்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.



அதனைத்‌ தொடாந்து, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.98க்குட்பட்ட சுந்தராபுரம்‌, சிட்கோ எல்‌.ஐ.சி பகுதியில்‌ டெங்கு கொசு ஓழிப்பு பணிகள்‌ குறித்து பணியாளர்களிடம்‌ கேட்டறிந்த மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌, கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள்‌ வீடு வீடாகச்‌ சென்று அபேட்‌ மருந்தை தொட்டிகளில்‌ ஊற்றவும்‌, தேவையில்லாத பொருட்களை அகற்றி, பொது மக்கள்‌ தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில்‌ கொசுப்‌ புழுக்கள்‌ உள்ளனவா என்பதை கண்டறியும்‌ பணிகளில்‌ ஈடுபடுமாறு அறிவுரைகளை வழங்கினார்‌.

பின்னர்‌, மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.75க்குட்பட்ட கிருஷ்ணம்பதி குளத்தில்‌ ரூ.1.50 கோடி மதிப்பீட்டில்‌ கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்‌ கட்டுமான பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்பு, மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.39-க்குட்பட்ட அஜ்ஜனூர்‌, காத்தி GST பகுதியில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டு திட்டத்தின் கீழ்‌ ரூ.92.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 1.45 கி.மீ தொலைவிற்கு நடைபெற்று வரும்‌ தார்‌ சாலை பணியினையும்‌, மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.41க்கு உட்பட்ட பி.என்‌.புதூர்‌, விவேகானந்தா வீதி, ஐஸ்வர்யா வீதி ஆகிய பகுதிகளில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டு திட்டத்தின் கீழ்‌ (TURIP 2022-2023) 2.2 கி.மீ. தொலைவிற்கு ரூ.1.31 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று வரும்‌ 19 சாலை பணிகளையும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டார்.

மேலும் அதன்‌ தரத்தினை பரிசோதனை செய்து ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்‌ தொடர்ந்து, மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.72 மற்றும்‌ 73க்கு உட்பட்ட எ.எ.திட்ட சாலை, பொன்னையராஜபுரம்‌ பிரதான சாலை, சொக்கம்புதூர்‌ சாலை, தெலுங்கு வீதி மற்றும்‌ சுந்தரம்‌ வீதி ஆகிய பகுதிகளில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டு திட்டம்‌ சிப்பம்‌ -1ன் கீழ்‌ 1.92 கி.மீ. தொலைவிற்கு ரூ.107.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்பு, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.70க்குட்பட்ட சுக்ரவார் பேட்டை பகுதியில்‌ 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ்‌ குடிநீர்‌ குழாய்‌ பதிக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடிக்க சம்மந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...