கோவையில் களைகட்டும் ஓணம் பண்டிகை..! குடும்பம் குடும்பமாக சென்று ஐயப்பன் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் சிறப்பு வழிபாடு

மலையாள மக்களின் வசந்தகால விழாவான திருஓணம் பண்டிகை கேரளாவில் வெகு சிறப்பா கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் புனித நீராடி பத்தாடை உடுத்தி சித்தாப்புதூர் ஐயப்பன் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் மனமுருகி வழிபட்டனர்.



கோவை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவிலில் சிறப்பு அத்தப்பூக்கோலம், செண்டை மேளம், சிறப்பு அலங்காரங்கள் என திரும்பிய திசையெல்லாம் விழா கோலம் பூண்டுள்ளது.

மலையாள மக்களால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் அஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை 10 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தை பொருத்தவரையில் இங்கு ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் ஏராளமானோர் உள்ளனர். இதனையொட்டி கடந்த வாரம் முதலே ஓணம் பண்டிகையை பள்ளிகள், கல்லூரிகள் சிறப்பாக கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில் முக்கிய நாளான திருவோண தினமான இன்று மக்கள் அதிகாலையிலேயே நீராடி புத்தாடை உடுத்தி திருக்கோவிலில் ஓணம் பண்டிகையை கொண்டாட தொடங்கியுள்ளனர்.



கோவையை பொறுத்தவரையில் மலையாளம் பேசும் மக்கள் அதிகம் வழிபாடு நடத்தும் சித்தாப்புதூர் ஐயப்பன் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் குடும்பங்களுடன் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவிலில் சிறப்பு அத்தப்பூக்கோலம், செண்டை மேளம், சிறப்பு அலங்காரங்கள் என விழா கோலம் பூண்டுள்ளது. ஓணம் பண்டிகைக்காக கோவையில் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளுர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...