தென்னந்தோப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியா? - சட்டவிரோத செயல் பற்றி துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறல்

பல்லடத்தில் தென்னந்தோப்பு ஒன்றை குத்தகைக்கு எடுத்து அதில் நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த சரவணன் என்பவர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை ஜாமீனில் எடுத்து விசாரித்தால் உண்மை தெரியும் என போலீசார் தெரிவித்தனர்.



திருப்பூர்: ராமசாமி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சட்டவிரோத செயல்கள் நடைபெற்றுள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதற்கு மூலக்காரணம் யார் என்று போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தொட்டம்பட்டி கிராமத்தில் தென்னந்தோப்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த தொட்டம்பட்டியை சேர்ந்த சரவணன் (43) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அங்கு நடத்திய சோதனையில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தை சரவணன் குத்தகைக்கு எடுத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து தென்னந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், சரவணனை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.



இதனிடையே இன்று மீண்டும் தென்னந்தோப்பிற்கு சென்ற போலீசார் அங்கு தென்னமரங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த கள் பானைகளை உடைத்து அழித்தனர்.

சம்பந்தமே இல்லாமல் பாலி புரப்பளின் கயிறுகளை உயர்ந்த தென்ன மரங்களுக்கிடையே கட்டப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



யாருக்கேனும் கயிற்றினால் ஆன தீவிர பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறதா?. அல்லது துப்பாக்கி கையாளும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளதா என்கிற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவு நேரத்தில் பிடிபட்ட மற்ற நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. தொட்டம்பட்டி சாலைக்கு மிக அருகிலே உள்ள தோட்டத்திற்கு செல்லும் வழியில் செக்போஸ்ட் போல் கயிறு கட்டி தடுப்பை ஏற்படுத்தியுள்ளதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் உள்ள சரவணனை மீண்டும் காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...