உடுமலையில் ஓணம் பண்டிகை - உற்சாகமாக கொண்டாடிய கேரள மக்கள்!

ஓணம் பண்டிகையையொட்டி உடுமலையில் வசிக்கும் கேரள மக்கள் தங்கள் வீடுகளில் பூக்களால் ஆன அத்தப்பூ கோலம் வரைந்தும், தீபம் ஏற்றியும், 21 வகையான உணவுகள் தயாரித்து இலைகளில் பரிமாறி மகாபலி சக்கரவர்த்திக்கு படைத்து வழிபட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.



திருப்பூர்: உடுமலையில் வசிக்கும் கேரள மக்கள் ஓணம் பண்டிகையையொட்டி, தங்கள் வீடுகளில் அத்த பூக்கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் ராமசாமி நகர், செந்தூர் கார்டன், கிரீன் பார்க் லே அவுட் உட்படபல்வேறு பகுதிகளில் வசிக்கும்மலையாள மக்கள் ஓணம்பண்டிகையை பாரம்பரியமான முறையில்உற்சாககொண்டாடினர்.



இதனையொட்டி மக்கள் தங்கள் வீடுகளில் பூக்களால் ஆன அத்தப்பூ கோலம் வரைந்தும், தீபம் ஏற்றியும், 21 வகையான உணவுகள் தயாரித்து இலைகளில் பரிமாறி மகாபலி சக்கரவர்த்திக்கு படைத்து வழிபட்டனர். உறவினர்கள், நண்பர்களுக்குவாழ்த்துக்களை பரிமாறியும் பாரம்பரியமான விளையாட்டுகளுடன் உற்சாகமாக கொண்டாடினர்.

இதுகுறித்து மலையாள மக்கள் கூறியதாவது,

ஓணம் பண்டிகை வருடம் தோறும்பத்து நாள் கொண்டாடும் நிலையில், இறுதி நாளில் ஓணத்தைமிக சிறப்பாக கொண்டாடி வருகின்றோம். மேலும் மாவலி மன்னனை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலம் இட்டும், களிமண்ணால் மாவலி உருவத்தை வீட்டின் முன்பு வழிபாடு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...