நொய்யல் திருவிழாவில் காவடி ஆட்டம் ஆடிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

கோவை பேரூரில் நடைபெற்று வரும் நொய்யல் திருவிழாவில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்த நிலையில் காவடி ஆட்ட குழுவினருடன் இணைந்து காவடி ஆட்டம் ஆடி உற்சாகப்படுத்தினார்.



கோவை: நொய்யல் திருவிழாவில் கலந்து கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை உற்சாகத்துடன் காவடி ஆட்டம் ஆடினார்.

கோவை பேரூர் ஆதீன மடத்தில், பாரதீய சன்யாசிகள் சங்கம் சார்பில் நொய்யல் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் தலைமையில் நடைபெற்று வருகிறது.

நொய்யல் ஆற்றை காப்பதை மையமாக கொண்டு நடைபெறும் இந்நிகழ்விற்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.



அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

அப்போது அவர், அங்கு நடைபெறும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார். முன்னதாக அவர் காவடி ஆட்ட கலைக் குழுவினருடன் இணைந்து காவடி ஆட்டம் ஆடினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...