துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் இ.பி.எஃப் ஓய்வூதியதாரர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்!

குறைந்தபட்ச பென்ஷன் மாதம் ரூ.9,000 பஞ்சபடியுடன் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இ.பி.எஃப் ஓய்வூதியதாரர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட இ.பி.எஃப் ஓய்வூதிய தாரர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு முடிவின் அடிப்படையில் கோவை மாவட்ட இ.பி.எஃப் ஓய்வூதியதாரர்களின் உண்ணாவிரதப் போராட்டம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.

மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், முன்னாள் மாவட்ட தலைவர் புஷ்பராஜன், மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல சங்கத்தின் மாநில தலைவர் சின்னசாமி இந்த உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.



இதில் குறைந்தபட்ச பென்ஷன் மாதம் ரூபாய் 9000 பஞ்சபடியுடன் வழங்கிட வேண்டும், இடைக்காலமாக பல்வேறு குழுக்களின் பரிந்துரைப்படி மாதம் 3000 ரூபாய் வழங்கிட வேண்டும், இ.பி.எஃப் ஓய்வூதியதாரர்களுக்கு இ.எஸ்.ஐ திட்டத்தில் மருத்துவ காப்பீடு வழங்கிட வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கு வழங்கி வந்த ரயில்வே கட்டண சலுகை மீண்டும் அமல்படுத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தகுதிகள் அனைவருக்கும் உயர் பென்ஷன் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குமாரசாமி, மாநில ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த செல்வராஜ், அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் துரைசாமி ஆகியோர் இந்த கோரிக்கைகளை விளக்கி பேசினார். மேலும் எஸ்.இ.டி.சி ஓய்வுபெற்றோர் நல அமைப்பு செயலாளர் சுரேந்திரன், உருமாண்டம்பாளையம் இ.பி.எப் ஓய்வூதியதாரர் தேவேந்திரன், வடக்கு தாலுகா பொது தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கேசவமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.



இந்த உண்ணாவிரதத்தில் சதாசிவம், நஞ்சுக்குட்டி, கருப்புசாமி, ரங்கசாமி, மனோகரன், ஆறுமுகப்பிள்ளை, பழனியப்பன், மருதாசலம், துரைசாமி, தாடி பழனிச்சாமி, மங்களாவள்ளி, பாலகிருஷ்ணன், மணி, விஜயகுமார், ராஜேந்திரன், தேவராஜ், சாமிநாதன், ராஜகோபால், கோவிந்தராஜ், சிவசாமி, சின்னதுரை, சுப்ரமணியம், நாராயணசாமி, என்.கே.பழனிச்சாமி, கேண்டின் பழனிச்சாமி, சந்தோஷ் உட்பட பல இ.பி.எஃப் ஓய்வூதியதாரர்கள் கலந்துகொண்டனர்.

இறுதியாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த இ.பி.எஃப் ஓய்வூதியதாரர் மாணிக்கம் நிறைவுரை கூறினார். மாவட்ட பொருளாளர் எஸ்.ஆர்.மணி நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...