கோவை மலுமிச்சம்பட்டியில் லாரியின் டேங்கர் வெடித்த பயங்கரம்..!! வெல்டிங் வைத்தவர் உயிரிழப்பு…

மலுமிச்சம்பட்டியில் வெல்டிங் வைக்கும் பணியின் போது லாரியின் டேங்கர் திடீரென வெடித்து சிதறியது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த வக்கீல் துடிதுடித்து உயிரை விட்டார்.



கோவை: டேங்கர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தநிலையில், மற்றொருவரும் ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தினர்.

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள கடையொன்றில் டேங்கர் லாரியின் டேங்கருக்கு வெல்டிங் வைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் டேங்கர் திடீரென வெடித்து சிதறியது.



இதில் வெல்டிங் வைத்துக்கொண்டிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த வக்கீல் என்பவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரவி என்பவர் படுகாயமடைந்தார்.

அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் கிடைத்து நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...