நல்லிணக்கம் மலர கோவையில் மும்மதத்தார் அமைதி ஜோதி ஏற்றம்..!! மும்மதத்தினர் பங்கேற்று கூட்டு பிராத்தனை…

நாட்டில் அமைதி நிலவ வேண்டி இந்துக்கள்,இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மும்மத பிரதிநிதிகள் அனைவரும் ஒன்று கூடி, அமைதி ஜோதி என்ற அணையா விளக்கு ஏற்றும் நிகழ்வு கோவையில் உள்ள ஸ்ரீ நாகசக்தி அம்மன் பீடத்தில் வெகு விமர்சையாக அரங்கேறியது.



கோவை: ஸ்ரீ நாகசக்தி அம்மன் பீடத்தில் அரங்கேறிய அணையா விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில், ஸ்ரீ நாகசக்தி பீடத்தின் விஸ்வகர்மா ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள், பாஜகவின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், நியூ லைப் தேவாலயத்தின் பாதர் இமானுவேல் ஜோசப் உள்ளிட்ட மும்மத பிரதிநிதிகள் மற்றும் மும்மதத்தினர் பங்கேற்றனர்.

கோவை மலுமிச்சம்பட்டியில் ஸ்ரீ நாகசக்தி பீடம் அமைந்துள்ளது. ஸ்ரீ நாகசக்தி அம்மனின் அருள் பெற்ற ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள், ஸ்ரீ நாகசக்தி பீடத்தின் மூலமாக பல்வேறு மத நல்லிணக்க பணிகள் மற்றும் ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த நிலையில் இன்று கோவையில் அமைதி நிலவ வேண்டி இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மும்மத பிரதிநிதிகள் அனைவரும் ஒன்று கூடி, அமைதி ஜோதி என்ற அணையா விளக்கு ஏற்றும் நிகழ்வு வெகு விமர்சையாக அரங்கேறியது.



ஸ்ரீ நாகசக்தி அம்மன் பீடத்தில் அரங்கேறிய இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ நாகசக்தி பீடத்தின் விஸ்வகர்மா ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள், பாஜகவின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், நியூ லைப் தேவாலயத்தின் பாதர் இமானுவேல் ஜோசப் உள்ளிட்ட மும்மத பிரதிநிதிகள் மற்றும் மும்மதத்தினர் பங்கேற்றனர்.

அமைதி வேண்டி நடந்த இந்த பிராத்தனையில், நாட்டு மக்கள் நலமுடன் வளமுடன் செழிப்பாக வாழ, மத நல்லிணக்கம் மலர்ந்து மக்கள் அமைதியான நிலையில் வாழ வேண்டும் என்ற பிராத்தனைகளும் இடம் பெற்றன. நீரின்றி அமையாது உலகு என்பதன் அடிப்படையில், இந்த உலகிற்கு நீர் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுவதனால், மழை வேண்டியும் நீர் வேண்டியும் பிராத்தனை நடைபெற்றன. உலகம் வெப்ப மயமாகி வரும் இந்த சூழ்நிலையில் 2030 அல்லது 2035 ஆண்டுகளில் உலக அளவில் கொரோனா போன்று பெரும் சுகாதார பிரச்சனை வரும் என பாபுஜி எச்சரித்தார்.

அனைவரும் மரம் நட வேண்டும், சுற்றுப்புறத்தை பாதுகாக்க முன்வர வேண்டும், நீர் மேலாண்மையை ஓங்குகின்ற விதமாக உரிய முயற்சிகளை எடுக்க பாபுஜி வலியுறுத்தினார். நாட்டில் நல்லிணக்க மலர்ந்து பொதுமக்கள் அனைவரும் அமைதியான சூழலில் வாழ வேண்டும் என தெரிவித்த பாபுஜி, இது குறித்த மத நல்லிணக்கில் தொடர்ந்து ஈடுபடுவதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பு வகித்த முன்னாள் முதல்வர், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புரட்சி தமிழன் என்ற பட்டத்துக்கு உரித்தானவர். பொதுமக்களின் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களையும் பல்வேறு நடவடிக்கைகளையும் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு இருக்கின்றார்.

டெங்கு காய்ச்சலின் போது கலை பாதுகாக்க அவர் மேல் கொண்ட சித்த மருத்துவ நடவடிக்கை முதல், கொரோனா காலகட்டத்தில் மேற்கொண்ட நடவடிக்கை என பல்வேறு நலப் பணிகளில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஈடுபட்டு இருக்கின்றார். வறட்சி பிடியில் இருந்த பல்வேறு கிராமங்களை அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் வாயிலாக செழிப்படைய செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி. பொதுமக்களின் பல்வேறு நலப் பணிகளில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி புரட்சி தமிழர் என்ற பட்டத்துக்கு உரித்தானவர் என ஸ்ரீ நாகசக்தி பீடத்தின் விஸ்வகர்மா ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...