கோவையில் ரக்சா பந்தன் விழா கோலாகலம்..!!- ராக்கி கட்டி, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

கோவையில் வட மாநில மக்கள் அதிகளவு வசித்து வரும் ஆர்.எஸ்.புரம், பூமார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ரக்சா பந்தன் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடினர். சகோதர, சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.


கோவை: இந்தி பாடல்களை பாடி உற்சாகமாக நடனமாடி ரக்சா பந்தன் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். ராக்கி கட்டிக்கொள்ளும் சகோததரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பரிசு பொருட்களை கொடுத்து உற்சாகப்படுத்தினர்.

கோவையில் வட மாநில மக்கள் அதிகளவு வசித்து வரும் ஆர்.எஸ்.புரம், பூமார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ரக்சா பந்தன் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.

சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக்சா பந்தன். இப்பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு கோவையில் வட மாநில மக்கள் அதிகளவு வசித்து வரும் ஆர்.எஸ்.புரம், பூமார்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடினர்.



அதில் சொக்கம்புதூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டியும் இனிப்புகளை வழங்கியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் இந்தி பாடல்களை பாடி உற்சாகமாக நடனமாடி ரக்சா பந்தன் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.



அதே போல ராக்கி கட்டிக்கொள்ளும் சகோததரர்களும் தங்கள் சகோதரிகளுக்கு பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...