சமுதாயத்தை பிளவுபடுத்தும் சக்திகளை நாம் புறக்கணிக்க வேண்டும்..! - பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் பேட்டி

மத உணர்வுகளை தூண்டி சமுதாயத்தை பிளவுபடுத்தும் சக்திகளை நாம் புறக்கணிக்க வேண்டும் என கோவை துடியலூரில் நடைபெற்ற அனைத்து சமூதாய பிரார்த்தனைக் கூட்டத்தில் பாஜக சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.



கோவை: அவரவர் மதத்தினுடைய கோட்பாடுகளை, கொள்கைகளை கோவில்களிலோ தேவாலயங்களிலோ, மசூதிகளிலோ பேசலாம் பொது இடங்களில் அவற்றைப் பேசும் போது தவறான புரிதலை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது என்று வேலூர் இப்ராஹிம் கூறினார்.

கோவை துடியலூர் உள்ள புதிய வாழ்வு நகர தேவாலயத்தில் அனைத்து சமுதாயத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பிரார்த்தனை நிகழ்வு நடந்தது.



இதில் தேவாலயத்தின் போதகர் இமானுவேல் ஜேக்கப், மலுமிச்சம்பட்டி நாகசக்தி தியான பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள், பாஜக சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அதில் இந்தியா புதிய வல்லரசாக உருவெடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மத உணர்வுகளைத் தூண்டி பாரதத்தை பிரித்தாளும் பணிகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதை மக்கள் புரிந்து கொண்டு புறக்கணிக்க வேண்டும். எல்லா மதத்தினரும் தங்களுடைய புனிதமான வார்த்தைகளை போராட்டங்களுக்கு பயன்படுத்துவதால் அவர்களை எதிர்மறை கருத்து கொண்டவர்களாக பொதுமக்கள் நினைக்கும் சூழல் உருவாகிறது. ஆகவே அவரவர் மதத்தினுடைய கோட்பாடுகளை, கொள்கைகளை கோவில்களிலோ தேவாலயங்களிலோ, மசூதிகளிலோ பேசலாம் பொது இடங்களில் அவற்றைப் பேசும் போது தவறான புரிதலை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது.

இதனை அனைத்து மதத்தினரும் தவிர்க்க வேண்டும். சகோதரத்துவம், அன்பு, விட்டுக்கொடுத்தல், ஒருமைப்பாடு போன்றவற்றை தான் அனைத்து மதங்களும் நமக்கு கற்பிக்கின்றன. மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவரவர் மதங்களின் செயல்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து கோவை மாவட்டத்தில் மழை பெய்யவும், வறட்சி நீங்கவும் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.



இதில் விஸ்வகர்மா சங்க உறுப்பினர்கள் மற்றும் தேவாலயத்தை சார்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...