துடியலூர் அருகே அதுல்யா சீனியர் கேர் சார்பில் மூத்த குடிமக்களுக்கான ப்ரீமியர் குடியிருப்பு திறப்பு!

துடியலூர் அருகே அதுல்யா சீனியர் கேர் சார்பில் மூத்த குடிமக்களுக்கான ப்ரீமியர் குடியிருப்பை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.



கோவை: துடியலூர் அருகே அதுல்யா சீனியர் கேர் சார்பில் மூத்த குடிமக்களுக்கான ப்ரீமியர் குடியிருப்பு இன்று திறக்கப்பட்டது.

கோவை துடியலூர் அருகே அதுல்யா சீனியர் கேர் சார்பில் மூத்த குடிமக்களுக்கான ப்ரீமியர் குடியிருப்பு திறக்கப்பட்டது.



இதனை கோயம்புத்தூர் மாநகர காவல்துறை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தனர்.



சுமார் 70 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய தொகுப்பு வீடுகள் உள்ளன. நாம் சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வையும், சூழ்நிலையும் இங்கு ஏற்படுகின்றன. மேலும் மருத்துவர் மற்றும் இதர பணியாளர்கள் 24 மணி நேரமும் உள்ளனர்.



இதனால் முதியோர்களுக்கு 24 மணி நேரமும் மருத்துவ பராமரிப்பும், தனிப்பட்ட கவனிப்பும் கிடைகிறது. மருத்துவ ஆதரவு, நலவாழ்வு செயல்திட்டங்கள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள், விளையாட்டுகள், நூலகம், உடல்நலத்தைப் பேணுவதற்காக முதியோர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உணவுமுறை திட்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அதுல்யா சீனியர் கேர் -ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஜி. ஸ்ரீனிவாசன் கூறியதாவது, மூத்த குடிமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மாறிவரும் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காக இம்மாதிரி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

அதுல்யா சீனியர் கேர் – ன் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர். ஆர். கார்த்திக் நாராயண் கூறியதாவது, இந்த வளாகத்தில் குடியிருக்கும் மூத்த குடிமக்கள் மிகவும் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வாழ்க்கையை நடத்த சிறாப்பான சூழலை நாங்கள் வழங்குகிறோம் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, கோயமுத்தூரில் இருந்து பல முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...