திருப்பூர் அருகே அரசு பேருந்தில் பெண்ணிடம் பணப்பையை திருட முயற்சி - 2 பெண்கள் கைது!

பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்தில் பயணித்த நஞ்சப்பாநகர் பகுதியை சேர்ந்த வானதி என்பவரிடம் இருந்து பணப்பையை திருட முயன்ற மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்த உஷா (53), மஞ்சு (45) ஆகியோரை போலீசா கைது செய்து சிறையில் அடைத்தனர்.



திருப்பூர்: திருப்பூர் அருகே அரசு பேருந்தில் பெண்ணிடம் பணப்பையை திருட முயன்ற மதுரையை சேர்ந்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் நஞ்சப்பாநகர் பகுதியை சேர்ந்த வானதி பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்தில் போயம்பாளையத்திற்கு வந்து கொண்டிருந்தார். அந்த பேருந்து பாண்டியன் நகர் அருகே வந்த போது அதே பேருந்தில் பயணித்த 2 பெண்கள் வானதியின் பணப்பையை திருட முயன்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த வானதி சக பயணிகள் உதவியுடன் அந்த 2 பெண்களையும் பாண்டியன்நகர் போலீஸ் சோதனைச்சாவடியில் உள்ள போலீசாரிடம் ஒப்படைத்தார். சோதனை சாவடியில் போலீசார் அந்த பெண்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில் சிறிய சிறிய பண்டல்களாக பணம் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட செல்போன்கள் இருந்தது தெரியவந்தது.

போலீசார் அந்த பெண்களை திருமுருகன்பூண்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் இருவரும் மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்த உஷா (53), மஞ்சு (45) என்பது தெரிய வந்தது. மேலும் இருவரும் வானதியிடம் பணப்பையை திருட முயன்றதை ஒப்புக்கொண்டனர்.

மேலும் அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து நல்லூரில் உள்ள மகளிர் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...