கோவையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகள்..! மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.!

கோவை மாவட்டம் கோட்டூர் பேரூராட்சி மலையாண்டிபட்டினம் மனோன்மணி செல்லமுத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு நிர்வாகத்துடன் இணைந்து ரோபோடிக்ஸ் பயிற்சி பாரதி அறக்கட்டளை ஆழியாறு அறக்கட்டளை வழங்கி வருவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மேலாண் இயக்குனருமான ஜெயஸ்ரீ முரளிதரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் நல்லட்டிபாளையம் ஊராட்சியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜெயஸ்ரீ முரளிதரன் நேரில் பார்வையிட்டார்.

கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மேலாண் இயக்குனருமான ஜெயஸ்ரீ முரளிதரன் கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.



அதன்படி கோவை மாவட்டம் கோட்டூர் பேரூராட்சி மலையாண்டிபட்டினம் மனோன்மணி செல்லமுத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு நிர்வாகத்துடன் இணைந்து ரோபோடிக்ஸ் பயிற்சி பாரதி அறக்கட்டளை ஆழியாறு அறக்கட்டளை வழங்கி வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அதனைத் தொடர்ந்து கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் நல்லட்டி பாளையம் ஊராட்சியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை பார்வையிட்டார்.



சமத்தூர் பேரூராட்சி ஐந்தாவது வார்டில் சாலை அமைக்கும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வுகளில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் உட்பட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...