தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வேண்டும் - கோவையில் தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வேண்டும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.


கோவை: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கோவையில் கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வேண்டும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...