வடகோவை ரயில் நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் ஆய்வு!

அம்ரித் திட்டத்தின் கீழ் வடகோவை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மேம்பாட்டு பணிகள் குறித்து மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா வி.ஜர்தோஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: வடகோவை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் புதிய கட்டுமான பணிகள் குறித்து மத்திய இணை அமைச்சர் தர்ஷனா வி.ஜர்தோஸ் ஆய்வு மேற்கொண்டார்.

வடகோவை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய கட்டுமான பணிகள் குறித்து மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சரான தர்ஷனா வி.ஜர்தோஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ரயில்வே பயணிகள் சங்கத்தினர் மற்றும் தொழில் துறையினர் ரயில்வே சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய இணை அமைச்சரிடம் அளித்தனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், வடக்கு ரயில் நிலையத்தை பார்வையிட மத்திய இணை அமைச்சர் கேட்டுக்கொண்டதை அடுத்து வந்துள்ளார். 11 கோடி மதிப்பீட்டில் அம்ரித் திட்டத்தில் புதிய மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

பயணிகள் மற்றும் தொழில் அமைப்பினர் பல்வேறு கோரிக்கை வைத்துள்ளனர். பயணிகளுக்கும், சரக்கு பொருட்கள் எடுத்து செல்வதற்கும் இந்த இரயில் நிலையம் முக்கியம் பங்கு வகிக்கிறது.

உலக தரத்தில் கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. ஜவுளித்துறை நிகழ்விற்காக வந்திருந்த இணை அமைச்சரை என்னுடைய தொகுதி எனக்கூறி அவரை அழைத்து வந்து கோரிக்கைகளை பெற செய்துள்ளேன்.

ரக்‌ஷா பந்தன் பரிசாக இத்தனை ஆண்டுகள் இல்லாத நிலையில் 11 கோடி பிரதமர் வழங்கியுள்ளார். இதனை நமக்கான பரிசாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பாரத பிரதமர் மேற்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, கோயம்புத்தூர் ரயில் நிலையத்தை உலக தரத்தில் மேம்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, மத்திய இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஸ் ஹிந்தியில் பேச, வானதி சீனிவாசன் மொழி பெயர்த்தார்.

அப்போது அவர் கூறியதாவது,



ரயில்வே துறையில் வளர்ச்சிக்கு பிரதமர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். நாட்டில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையங்களை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஜவுளிதுறையில் முக்கிய நகரமாக கோவை விளங்குகிறது.

நாடு முழுவதும் ஏற்றுமதி பொருட்களை கொண்டு செல்ல ரயில் சேவை முக்கியமாக உள்ளது. நகரத்தை ஒட்டியுள்ள இரயில் நிலையங்களை மேம்படுத்தினால் பெரிய அளவில் வளர்ச்சி ஏற்படும். ரயில் சேவை உயர்த்தும் போது சுற்றுலா துறையும் வளர்ச்சி அடையும்.

வந்தே பாரத் இரயில் சேவையானது முக்கிய நகரங்களை இணைத்துள்ளது. அம்ரித் திட்டத்தில் கோவை வடக்கு இரயில் நிலையம் தேர்வாகி பணிகள் நடந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் இரயில்வே துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கியுள்ளார்.

ஒருங்கிணைத்த வளர்ச்சியை பிரதமர் விரும்புகிறார். அதன் அடிப்படையிலயே அம்ரித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...