முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா - கோவையில் கூடிய திமுக பொதுக்கூட்டம்

கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதி கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.



கோவை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி வணங்கினர். இந்த விழாவில் 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதி கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதற்கு கவுண்டம்பாளையம் பகுதி செயலாளர் ஜே.எஸ்.சரத் விக்னேஷ் தலைமை தாங்கி பேசினார். 17 வது வார்டு வட்ட கழக செயலாளர் குட்டி என்கிற வேலுச்சாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.



இந்த கூட்டத்தில் திமுக கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



அவர் பேசும்போது மிசா காலங்களில் கருணாநிதியுடன் இருந்த அனுபவங்களை எடுத்துக் கூறி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து மாணவரணி தலைவர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி பேசும்போது பாஜக தேர்தலுக்காகவே கேஸ் விலையைக் குறைத்துள்ளதாக தெரிவித்தார்.

மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி சிறப்புரையாற்றினார்.



இதைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகளை வழங்கினர். அதேபோல் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவபடத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.

இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.பி. ஏ.பி நாகராஜன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் அருண்குமார், மாவட்ட துணை செயலாளர் அசோக் பாபு ஆறுக்குட்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், மாவட்ட கழக பொருளாளர் அப்துல் ரகுமான் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



இதில் மாமன்ற உறுப்பினர்கள், வட்டக் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கே.எம்.சண்முகசுந்தரம், வசந்தகுமார், ஈஸ்வரன், கண்ணகி, லோகநாதன், சனல்குமார், பிரபாகரன், கல்யாணசுந்தரம், வெற்றிவேல், ரமணன், தன்ராஜ், காளிதாஸ், குமரேசன், தமிழ்ச்செல்வன், சுபஸ்ரீ சரத், கிருஷ்ணமூர்த்தி, சம்பத், கே.என்.ஜவகர், கே.எம்.சுந்தரம், ஜி.ஆர்.துரைசாமி, மிசா தேவராஜ், சௌகத் அலி, மதியழகன், வேலுமணி, நாகராஜ், கே.எம்.பாலகிருஷ்ணன், டாக்டர்.கணேஷ், சண்முகம், முருகேசன், பகுதி கழக செயலாளர்கள் அருள்குமார், எஸ்.பி.சுரேஷ்குமார் மற்றும் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்டக் கழக நிர்வாகிகள், பாக நிலை முகவர்கள், 16, 17, 33, 34, 35 வது வார்டு கழக மூத்த முன்னோடிகள் மற்றும் கட்சி உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் பகுதி கழக துணை செயலாளர் கே. சங்கர் நன்றி உரை கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...