திருப்பூரில் கல்குவாரிகள் மீது நடவடிக்கை தேவை.. குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை..

கோவை மாவட்டத்தில் முறைகேடாகவும் வெடிவைத்து கற்களை உடைத்தும் மாசு ஏற்படுத்தும் கல் குவாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட அலுவலக கூட்டறங்கில் நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கூட்டம் இன்று நடைபெற்றது.



இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.



குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முறைகேடாக கல் குவாரிகள் இயக்கப்பட்டு வருவதாகவும், ஒரு சில இடங்களில் அரசு அனுமதி இல்லாமல் வெடிவைத்து பாறைகள் தகர்க்கப்படுவதாகவும், இதனால் மாசு ஏற்படுவதோடு அருகில் கால்நடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று புகார் தெரிவித்தனர்.

எனவே, அதனை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...