தாராபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியின் மேல் தளத்தில் திடீர் தீ விபத்து - பழைய ஆவணங்கள் தீக்கிரையாகின!

தாராபுரம் இந்தியன் வங்கி கிளையின் மேல் தளத்தில், ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், கட்டிடத்தின் உரிமையாளர் சாந்தகுமாருக்கு சொந்தமான ஆவணங்கள் தீக்கிரையான நிலையில், தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



திருப்பூர்: தாராபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியின் மேல் தளத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் - உடுமலை சாலை சந்திப்பில், சாந்தகுமார் (60) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் தாராபுரம் இந்தியன் வங்கியின் இரண்டாவது தளத்தில் இருந்து, இன்று காலை 11 மணியளவில், திடீரென கரும் நிறத்தில் புகை வந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்து கீழ்த்தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இரண்டாவது தளத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு கட்டிடத்தின் உரிமையாளர் சாந்தகுமாருக்கு சொந்தமான ஆவணங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறையில், தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.



இதையடுத்து, வங்கி அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த தாராபுரம் தீயணைப்புத்துறையினர், வங்கி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...