சுங்கம் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் அமைச்சர் கயல்விழி திடீர் ஆய்வு!

சுங்கம் பகுதியில் நிர்மலா கல்லூரிக்கு எதிரேயுள்ள ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், அங்கு தேவைப்படும் வசதிகள் மற்றும் உணவுகளின் தரம் குறித்து மாணவிகளிடம் கேட்டறிந்தார்.


கோவை: சுங்கம் பகுதியில் நிர்மலா கல்லூரிக்கு எதிரேயுள்ள ஆதிதிராவிடர் மாணவியர்கள் விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொள்கிறார். அதன் ஒரு நிகழ்ச்சியாக சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா கல்லூரி வளாகத்திற்கு எதிரில் அமைந்துள்ள ஆதிதிராவிட மாணவியர்கள் விடுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அங்கு ஆய்வு மேற்கொண்ட அவர், அங்குள்ள வசதிகள் குறித்தும் தேவைப்படும் வசதிகள் குறித்தும் மாணவிகளிடம் கேட்டறிந்தார்.



மேலும் அங்குள்ள உணவுகளின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ் உட்பட பல உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...