தேங்காய் விலை வீழ்ச்சி..! - கோவையில் விவசாயிகள் மாட்டு வண்டி ஊர்வலம்..!

தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சுல்தான்பேட்டையில் தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து மாட்டு வண்டியுடன் வந்து விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: உடல் நலத்துக்கு தீங்கு இழைக்கக்கூடிய டாஸ்மார்க் மதுகடைகளை மூட வேண்டும். பாமாயில் இறக்குமதியை தடை செய்து, அனைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணையை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கேட்டுகொண்டனர்.

தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சுல்தான்பேட்டையில் தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து மாட்டு வண்டியுடன் வந்து விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநில பிரச்சார குழு தலைவர் பூரண்டாம்பாளையம் மணி முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் விவசாயிகள் மாட்டு வண்டிகளுடன் ஊர்வலமாக வந்து கலந்து கொண்டு சுல்தான் பேட்டையில் இருந்து செஞ்சேரி பிரிவு, செஞ்சேரி, செஞ்சேரிமலை ஆகிய 4 இடங்களில் போராட்டங்களை நடத்தினர்.

5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாட்டு வண்டிகளில் கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். தமிழகம் முழுவதும் தேங்காய் விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கொள்முதல் செய்யும் விலை மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் பொது மக்களுக்கு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு கர்நாடகா, பீகார், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை போன்று கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு இழைக்கக்கூடிய டாஸ்மார்க் மதுகடைகளை மூட வேண்டும். பாமாயில் இறக்குமதியை தடை செய்து, அனைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணையை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதிய உணவு, காலை சிற்றுண்டி ஆகிய திட்டங்களில் தேங்காய் எண்ணையை பயன்படுத்த வேண்டும். இதற்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதனையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடந்த 30 நாட்களாக தினமும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒவ்வொரு பகுதிகளிலும் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...