மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்ப்பு...!! காயக்கட்டுப்போட்டு கோவையில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் மணிப்பூர் கலவரம் ஏற்பட்டத்திற்காக பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து அனைத்து கட்சியினரின் காயக்கட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை: மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பேற்று மத்திய அரசும், மணிப்பூர் மாநில அரசும் பதவி விலக வேண்டும் என்று உடலின் பல்வேறு பாகங்களில் காயம் ஏற்பட்டது போல் அதற்கு கட்டுப்போட்டுக் கொண்டு பல்வேறு கட்சிகளை சேர்ந்த கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே மணிப்பூர் கலவரத்துக்கு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மோடி அரசு தான் காரணம் என கூறி தந்தை பெரியார் திராவிட கழகம் தலைமையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் பங்கேற்ற காயகட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதற்கு தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, இந்திய தேசிய காங்கிரஸ், சிபிஐ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, எஸ்.டி.பி.ஐ, தமிழ் புலிகள் கட்சி, திராவிட தமிழர் கட்சி, மே 17 இயக்கம், திராவிடர் மக்கள் இயக்கம், தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை கழகம் மற்றும் முற்போக்கு அமைப்புகள் ஒன்றினைந்து ஆர்பாட்டத்தில் கோசங்களை எழுப்பினர்.

மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பு ஏற்று மத்திய மற்றும் மணிப்பூர் மாநில பாரதிய ஜனதா கட்சி ஆட்சி விலக வேண்டும் என்று கோசங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கை, கால், தலை என தனது உடம்பில் ரத்த காயங்கள் ஏற்பட்டதுபோல காயக்கட்டு போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக வடக்கு விவசாய அணி கனகதாஜ், ஐ.டி விங் ஹரிஸ், சுப்பிரமணி, வட்ட கழக துணைச் செயலாளர் தமிழ் நிதி, வெற்றி செல்வன், அயுப்கான், சுணைதீன், சூரியன் தம்பி, தமிழ் புலிகள் கவுதமன், சி.பி.எம் நாகேந்திரன், சுரேந்திரன், சசிகுமார், ஆறுச்சாமி, சி.பி.ஐ வி.ஆர் பாண்டியன், எஸ்.டிபி.ஐ பாதுஷா, சுல்தான், செய்யது ஹக்கிம், ஹமுதீன், சாகுல் ஹமிது, தமிழ்நாடு திராவிடர் சுயமாரியாதை கழகம் நேருதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...