தினமலர் நாளிதழுக்கு வலுக்கும் எதிர்ப்பு… கோவையில் மலம் வீசும் போராட்டம்..! தபெதிக வினர் கைது

தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தினமலர் அலுவலகம் மீது மலம் வீசும் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.



கோவை: காலை சிற்றுண்டி திட்டத்தை கொச்சப்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த நாளிதழ் மீது மலத்தை வீசி கண்டனத்தை பதிவு செய்தனர்.



தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தினமலர் அலுவலகம் மீது மலம் வீசும் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை விமர்சித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் பல்வேறு தரப்பில் அதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில் கோவையில் சுந்தராபுரம் பகுதியில் உள்ள தினமலர் அலுவலகம் மீது மலம் வீசும் போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.



இந்த சூழலில் கட்சியின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் கோவை பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் சந்திப்பு பகுதியில் ஒரு கையில் பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வந்த மலத்தையும் மற்றொரு கையில் தினமலர் நாளிதழ் செய்தி பிரசுரத்தையும் வைத்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து அங்கிருந்து தினமலர் அலுவலகம் நோக்கி சென்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதையடுத்து கையில் வைத்திருந்த நாளிதழ் பிரசுரத்தை சாலையில் போட்டும் அதன் மீது தாங்கள் கொண்டு வந்த மலத்தை வீசியும் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.



இதை தொடர்ந்து அதில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...