கோவை கருமத்தம்பட்டி நுகர் பொருள் வாணிப கிடங்கில் அமைச்சர் சக்கரபாணி திடீர் ஆய்வு…

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் உணவுப் பொருட்கள் தர கட்டுப்பாட்டு ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. இவற்றை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வாணிபக் கிடங்கை திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.




கோவை: ரேஷன் கடையில் ஆய்வு செய்து, மக்களிடையே பொருட்கள் உரிய நேரத்தில் தரமாக கிடைக்கிறதா என்று அமைச்சர் சக்கரபாணி கேட்டறிந்தார். இதை அடுத்து வாகராயம்பாளையத்தில் உள்ள வீடுகளுக்கும் சென்று பொருட்கள் தடையின்றி சரியான முறையில் கிடைக்கிறதா? என்று பொதுமக்களிடம் அவர் கேட்டார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் உணவுப் பொருட்கள் தர கட்டுப்பாட்டு ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. இவற்றை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வாணிபக் கிடங்கை திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வினியோக கிடங்குகளை தமிழக அரசு நவீனப்படுத்தி வருகிறது. மொத்தமுள்ள 287 நுகர்பொருள் விநியோக கிடங்குகளில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நலன் கருதி தானியங்கி எந்திரங்கள் உதவியுடன் கிடங்குகளில் பொருட்களை அனுப்ப நவீன எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக உணவுப்பொருட்களை தர ஆய்வு செய்ய அனைத்து கிடங்குகளிலும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கருமத்தம்பட்டியில் உள்ள 22 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிலும் தர ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது .

இங்கு அமைக்கப்பட்டு வரும் தர ஆய்வுக்கூடத்தை அமைச்சர் சக்கரபாணி திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார். பிறகு அங்கு இருக்கக்கூடிய உணவு பாதுகாப்பு கிடங்கை ஆய்வு செய்தார். அங்குள்ள உணவுப் பொருட்கள் வினியோகிக்கப்படும் விதத்தை கேட்டறிந்தார்.

பிறகு அமைச்சர் கூறுகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளும் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தர ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. பொது விநியோகத் திட்டத்தை தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்காக உணவுப்பொருட்கள் தரமாகவும், காலதாமதமின்றியும் சரியான எடையில் பொருட்களை வழங்கவும் உணவுப்பொருள் வாணிப கிடங்குகள் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் அண்ணாதுரை, கோவை மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ராமச்சந்திரன், கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா மனோகரன், கோவை மாவட்ட தர கட்டுப்பாட்டு மேலாளர் வனிதா, கருமத்தம்பட்டி நுகர்பொருள் பொருள் கிடங்கின் தர ஆய்வாளர் ரஞ்சித்குமார், சூலூர் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் கவிதா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அமைச்சர் சக்கரபாணி, வாகராயம்பாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு செய்தார். அங்குள்ள வாகராயம்பாளையம் ரேஷன் கடையில் ஆய்வு செய்து, மக்களிடையே பொருட்கள் உரிய நேரத்தில் தரமாக கிடைக்கிறதா என்பதை கேட்டறிந்தார். இதை அடுத்து வாகராயம்பாளையத்தில் உள்ள வீடுகளுக்கும் சென்று பொருட்கள் தடையின்றி சரியான முறையில் கிடைக்கிறதா? என்பதை பொதுமக்களிடையே கேட்டறிந்தார். அப்போது கோவை கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பார்த்திபன், கோவை மாவட்ட பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...