பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் சிறுவர் பூங்கா திறப்பு - காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பங்கேற்பு..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் திறந்து வைத்தார். தொடர்ந்து காவலர் குடியிருப்புகள் மற்றும் காவல் நிலையத்தையும் அவர் ஆய்வு செய்தார்.



கோவை : சிறுவர் பூங்காவினை திறந்து வைக்க வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனுக்கு காவலர் குடியிருப்பில் குடியிருக்கும் காவலரின் குழந்தைகள் பூங்கொந்து கொடுத்த வரவேற்றார்.



அதன்பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறுவர் பூங்காவின் கல்வெட்டினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.



கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் திறந்து வைத்தார்.



தொடர்ந்து காவலர் குடியிருப்புகள் மற்றும் காவல் நிலையத்தையும் அவர் ஆய்வு செய்தார்.



கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய காவலர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நலன் கருதி, நடைபயிற்சி மேற்கொள்வதற்காக நடைபயிற்சி மையம் மற்றும் காவலர்களின் குழந்தைகள் மகிழ்விற்காகவும், பொழுதுபோக்குக்காகவும் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் சுமார் 50 சென்டில் சிறுவர் பூங்கா ஒன்று பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினரால் உருவாக்கப்பட்டது.

சிறுவர் பூங்காவினை திறந்து வைக்க வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனுக்கு காவலர் குடியிருப்பில் குடியிருக்கும் காவலரின் குழந்தைகள் பூங்கொந்து கொடுத்த வரவேற்றார். அதன்பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறுவர் பூங்காவின் கல்வெட்டினை திறந்துவைத்தார்.



தொடர்ந்து சிறுவர் பூங்காவினை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்து பூங்காவில் ஊஞ்சல் மற்றும் சி-சா விளையாடும் குழந்தைகளுடன் உரையாடினார்.



அங்கு அமைக்கபட்டுள்ள செட்டில்கார்க் மைனதானத்தில் பயிற்சி எடுத்துவரும் மாருதி உடற்கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.



தொடர்ந்து காவல் நிலைய வளாகத்திலுள்ள காவலர் குடியிருப்புகளை பார்வையிட்டு அங்கு குடியிருக்கும் காவலர் குடும்பத்தாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.



அதன்பிறகு காவலர் குடியிருப்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து காவல்நிலையத்திற்கு சென்ற அவர் அங்கு ஆவணங்களை ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், ஆய்வாளர் தாமோதரன், உதவி ஆய்வாளர்கள் சிலம்பரசன், கணேசமூர்த்தி, தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ஐயப்பசாமி, தனிப்பிரிவு சிறப்பு காவலர் கங்காதரன் விஜயகுமார், பயிற்சி உதவி ஆவாளர் பாலகணேஷ், காவலர் அன்சர், மாருதி கல்லூரியின் ஆசிரியர் தங்கராஜ், காவலர் குடியிருப்பில் குடியிருக்கும் காவலர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் உட்பட பலர் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...