திருப்பூரில் சுழற்றி அடித்த சூறைக்காற்று… வடக்கு தாலுக்கா அலுவலகத்தில் 2 மரங்கள் முறிந்து விழுந்ததால் பரபரப்பு..!!

திருப்பூர் குமரன் ரோட்டில் வடக்கு தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்த இரண்டு மரங்கள் சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்தன. நல்வாய்ப்பாக பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.



திருப்பூர்: சுழற்றி சுழற்றி அடித்த சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அரசு அலுவலகத்தில் இருந்த இரண்டு மரங்கள் பயங்கர சத்தத்துடன் முறிந்து விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் குமரன் ரோட்டில் வடக்கு தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் இ சேவை மையம் கிளைச் சிறை ஆகியவையும் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தாலுகா அலுவலகம் மற்றும் இ சேவை மையங்களுக்கு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருப்பூரில் அவ்வப்போது சூறைக்காற்றுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது.



திருப்பூர் தாலுக்கு அலுவலகத்தில் நிழல் தரும் வகையில் இருந்த இரண்டு மரங்கள் சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.



இதனால் தாலுக்கா அலுவலகவளாகத்தில் சிறிது பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...