பல்லடத்தில் அரசு நிலம் ஆக்கிரமிக்க முயற்சி… இரவோடு இரவாக குடியேறிய மக்கள்.. தாசில்தார் எடுத்த அதிரடி நடவடிக்கை

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் இரவோடு இரவாக அப்பகுதிமக்கள் குடியேறினர். விரைந்து வந்த தாசில்தார், இதுதொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளதால், உடனடியாக வெளியேற வேண்டும், இல்லாவிட்டால் வழக்கு போடப்படும் என்று எச்சரித்தார். இதனையடுத்து அனைவரும் திரும்பிச்சென்றனர்.



திருப்பூர்: அரசு புறம்போக்கு நிலத்தை ஊர்மக்கள் ஒன்றுகூடி ஆக்கிரமிக்க முயன்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்காலிகமாக ஷெட் போட்டு இருந்தவர்கள் அனைவரையும் தாசில்தார் வெளியேற்றினார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இச்சிப்பட்டி ஊராட்சி கொத்துமுட்டிபாளையம் கிராமத்தில், 12 ஏக்கர் பரப்பளவில் குட்டை மற்றும் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதிலுள்ள, 5 ஏக்கர் நிலத்தில், அப்பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள், தன்னார்வலர்கள் இணைந்து, 7 ஆயிரம் மரங்கள் நட்டு வைத்து, அவற்றுக்கு சொட்டு நீர் பாசனம் அமைத்து முல்லை வனம் தாவரவியல் பூங்கா என்ற பெயரில், பூங்கா அமைத்து பராமரித்து வருகின்றனர்.

இந்த இடத்திற்கு பட்டா கேட்டு, பொதுமக்கள் சிலர் மனு அளித்துள்ளனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு, பூங்காவை அகற்றிவிட்டு பட்டா வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதை எடுத்து ஊர் பொதுமக்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் சூழலில், நேற்று இரவு, பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பூங்கா அமைந்துள்ள பகுதியில் கூடினர்.



மூங்கில்கள், தார்ப்பாய், சிமெண்ட் ஷீட் ஆகியவற்றை இறக்கி, தற்காலிக ஷெட் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.



இது குறித்து தகவல் அறிந்து வந்த மங்களம் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், ஷெட் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இருப்பினும் பொதுமக்கள் கலைந்து செல்லாமல் இரவு முழுவதும் அங்கேயே தங்கினர்.



இன்று காலை மீண்டும் ஷெட் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் சம்பவ இடத்துக்கு வந்தார். அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பது தவறு. இந்த இடம் குறித்து ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இதற்கிடையே இது போன்று செயல்களில் ஈடுபடுவது கோர்ட்டை அவமதிக்கும் செயலாகும். கோர்ட் தீர்ப்பு வராமல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது. நீங்கள் எடுத்து வந்துள்ள பொருட்களை பத்திரமாக இங்கிருந்து திருப்பி எடுத்துச் செல்லுங்கள்.

இதையும் மீறி மீண்டும் ஷெட் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்படும். இத்துடன், கோர்ட் உத்தரவை மீறியதற்காக அனைவரும் மீதும் வழக்குப் பதியவும் வாய்ப்பு உள்ளது என்றார். இதையடுத்து தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஷெட் அனைத்தும் அகற்றப்பட்டன. இதனால், இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...