பில்லூர் 3வது குடிநீர் திட்டம்.. வரும் 25ம் தேதி இயல்பு நீர் சோதனை ஓட்டம் நடைபெறும் என கோவை மாநகராட்சி அறிவிப்பு

பில்லூர்‌ 3-வது குடிநீர்‌ திட்டத்தில்‌ இயல்பு நீர்‌ சோதனை ஓட்டம்‌ வருகின்ற 25.09.2023 அன்று நெல்லித்துறை முருகையன்‌ பரிசல்துறை தலைமை நீரேற்றும்‌ நிலையத்தில்‌ சோதனை ஓட்டம்‌ மேற்கொள்ளவும்‌, அக்டோபர்‌ 20-ம்‌ தேதிக்குள்‌ முழுமையான சோதனை ஓட்டம்‌ மேற்கொள்ளும்‌ வகையில்‌ போர்கால அடிப்படையில்‌ பணிகளை செய்து முடித்திட பொறியாளா்களுக்கு ஆலோசனைக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.



கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ விரிவுபடுத்தப்பட்டுள்ள மற்றும்‌ புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பவானி ஆற்றின்‌ நீர் ஆதாரமாக கொண்ட பில்லூர்‌-III குடிநீர்‌ திட்டத்தின்‌ ஒருபகுதியாக மேட்டுப்பாளையம்‌, நெல்லித்துறை முருகையன்‌ பரிசல்துறை தலைமை நீரேற்றும்‌ நிலையம்‌, மருதூர்‌ ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம்‌ பகுதியில்‌ சுத்திகரிப்பு நிலையம்‌ ஆகிய பணிகள்‌ 95% பணிகள்‌ நிறைவு பெற்றுள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, பாரதி பார்க்‌ சாலையில்‌ அமைந்துள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய தலைமைப்‌ பொறியாளர்‌ அலுவலகத்தில்‌ ரூ.779 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்றுவரும்‌ பில்லார்‌-3வது கூட்டுக்குடிநீர் திட்டம்‌, ரூ.591.14 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்றுவரும்‌ குறிச்சி குனியமுத்தூர்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ குறித்த ஆலோசனைக்‌ கூட்டம்‌ தமிழ்நாடு குடிநர்‌ வடிகால்‌ வாரிய மேலாண்மை இயக்குநர்‌ வி.தட்சிணாமூரத்தி தலைமையில்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌ முன்னிலையில்‌ நடைபெற்றது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ விரிவுபடுத்தப்பட்டுள்ள மற்றும்‌ புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பவானி ஆற்றின்‌ நீர் ஆதாரமாக கொண்ட குடிநீர் பில்லூார்‌-III குடிநீர் திட்டத்தின்‌ ஒருபகுதியாக மேட்டூப்பாளையம்‌, நெல்லித்துறை ஊராட்சி, முருகையன்‌ பரிசல்துறை பகுதியில்‌ பில்லூர்‌ கூட்டுக்குடிநீர் à®¤à®¿à®Ÿà¯à®Ÿà®®à¯‌-III, ரூ.134 கோடி மதிப்பீட்டில்‌ தலைமை நீரேற்றும்‌ நிலையம்‌ கட்டுமான பணிகளை வருகின்ற செப்டம்பர்‌ 25-ந்தேதி நெல்லித்துறை முருகையன்‌ பரிசல்துறை தலைமை நீரேற்றும்‌ நிலையத்தில்‌ இயல்பு நீர் சோதனை ஓட்டம்‌ மேற்கொள்ளவும்‌, அக்டோபர்‌ மாதம்‌ 20-ம்‌ தேதி மருதார்‌ சுத்திகரிப்பு நிலையத்தில்‌ இருந்து குடிநீர் பம்பிங்‌ செய்து பில்லூர்‌ 3-வது கூட்டுக்குடிநீர்‌ திட்டத்தில்‌ பன்னிமடை பகுதியில்‌ ரூ.104 கோடி மதிப்பீட்டில்‌ 73 இலட்சம்‌ லிட்டர்‌ கொள்ளளவு கொண்ட இரண்டு குடிநீர் சேகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரும்‌ வகையில்‌ முழுமையான சோதனை ஓட்டம்‌ மேற்கொள்ளவும்‌, போர்கால அடிப்படையில்‌ கட்டுமானப்‌ பணிகளை தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய பொறியாளா்களுக்கு அறிவுறுத்தினார்கள்‌.

அதனைத்தொடர்ந்து, 591.14 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்றுவரும்‌ குறிச்சி குனியமுத்தூர்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகளில்‌ 390 கிலோ மீட்டர்‌ தொலைவிற்கு பாதாள சாக்கடை குழாய்‌ அமைக்கும்‌ பணிகளில்‌ தற்போது 362 கிலோ மீட்டார்‌ தொலைவிற்கு குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ முடிவுற்றுள்ளது. தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில்‌ 28 கிலோ மீட்டர் தொலைவிற்கு குழாய்‌ அமைக்கும்‌ பணி மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

செப்டம்பர்‌ மாத இறுதிக்குள்‌ 17 கிலோ மீட்டர்‌ தொலைவிற்கு குழாய்‌ அமைக்கும்‌ பணியை செய்து முடிக்கவும்‌, மீதமுள்ள 9 கிலோ மீட்டர்‌ தொலைவிற்கு பணிகளை செய்து முடிக்கவும்‌ உத்தரவிட்டார்கள்‌. மேலும்‌, நீருந்து நிலையத்தில்‌ இருந்து (PUMPING STATION) அப்பகுதியில்‌ உள்ள வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும்‌ பணிகளை மேலும்‌ துரிதப்படுத்தி இணைப்புகளை வழங்க வேண்டும்‌ என தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூத்தி , மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, ஆகியோர்‌ அறிவுறுத்தினார்கள்‌.

இக்கூட்டத்தில்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய கோயம்புத்தூர் தலைமைப்‌ பொறியாளர்‌ (பொ) செல்லமுத்து, ஒருங்கிணைப்பாளா்‌ சீனிவாசன்‌, செயற்பொறியாளர்கள்‌ செந்தில்குமார்‌, தமிழ்ச்செல்வன்‌, தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய உதவி செயற்பொறியாளார்கள்‌ பட்டன்‌, மதியழகன்‌, ராதா, கீதாதேவி, தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய பொறியாளர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...